திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் மகா தீபம் ஏற்ற வேண்டித் திருச்சி அருகே தேங்காய் உடைக்க முயன்ற இந்து முன்னணி அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.
துவரங்குறிச்சியில் உள்ள பூதநாயகி அம்மன் ஆலயம் முன்பு, அவர்கள் தேங்காய் உடைத்து வழிபட முயன்றனர்.
அப்போது அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் தனியார் திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர்.
















