சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசு தயங்குவது ஏன் எனப் பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தக் கோரியும், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு வழங்கக் கோரியும் பாமகவின் ராமதாஸ் பிரிவு சார்பில் தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அந்த வகையில் சென்னை எழும்பூரில் பாமக நிறுவனர் ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் பாமக ராமதாஸ் பிரிவுச் செயல் தலைவர் ஸ்ரீகாந்தி, கெளரவ தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மேடையில் பேசிய ராமதாஸ், சாதிவாரி கணக்கெடுப்பை நடத்த தமிழக அரசு தயங்குவது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும் அண்டை மாநிலங்களை பார்த்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி, 324 சாதிகளுக்கான இட ஒதுகீட்டை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
















