பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்திச் சேலத்தில் ஜாக்டோ – ஜியோ அமைப்பினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெறும் இந்தப் போராட்டத்தில் 500க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், திமுகவின் தேர்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
ஊழியர்களின் போராட்டம் காரணமாகச் சேலம் கோட்டை மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
















