அதிக பனிப்பொழிவு காரணமாக வேலூரில் உள்ள பள்ளிக்கொண்டா சுங்கச்சாவடியில் வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வில் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிர செய்யும்படி ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை தரப்பட்டது.
மேலும் வாகன ஓட்டிகளுக்கு இலவசமாகத் தேனீர் வழங்கியும் பனிப்பொழிவின்போது வாகனத்தை எப்படி இயக்க வேண்டும் என்பது குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
















