உக்ரைனின் ஒடேசா பகுதியில் தாக்குதல் நடத்திய ரஷ்ய ராணுவத்திற்கு அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், ரஷ்ய ராணுவத்தின் வான்வழி தாக்குதலால் ஒடேசாவின் எரிசக்தி உள்கட்டமைப்பு சேதமடைந்துள்ளதாகவும், நிலைமை தற்போது சீராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுமக்களின் வாழ்க்கையை பாதிக்கும் நோக்கில் ரஷ்ய ராணுவம் செயல்பட்டு வருவதாகவும், அமைதியை நிலை நிறுத்த ரஷ்யாவை தொடர்ந்து வலியுறுத்தும் ஒவ்வொருவருக்கும் நன்றி எனவும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி பதிவிட்டுள்ளார்.
















