உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு ஆதரவாக அனுப்பப்பட்ட ராணுவ வீரர்கள், கால், கைகளில் பலத்த காயமடைந்து சொந்த நாட்டிற்கு திரும்பிய நிலையில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அவர்களைக் கட்டியணைத்து வரவேற்றுள்ளார்.
வல்லரசு நாடுகளில் ஒன்றான ரஷ்யாவுக்கு, உக்ரைனை எதிர்கொள்வதற்காகப் பல்லாயிரக்கணக்கான வீரர்களை வடகொரியா அனுப்பியுள்ளது. 3 ஆண்டுகளாக ஓயாத போருக்கு இடையில், ராணுவ வீரர்கள் பலர் வடகொரியா திரும்பியுள்ளனர்.
அவர்களில் சிலர் போரின் போது கை, கால்களில் பலத்த காயங்களுடன் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறு வருகை தந்துள்ளனர். அப்போது வீரர்களை சந்தித்த அதிபர் கிம், கட்டி தழுவி அனைவரையும் வரவேற்றார்.
அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் என பல நாடுகளை ஏவுகணை சோதனை மூலம் அச்சுறுத்தி வரும் கிம், இந்த வீடியோவில், தங்கள் நாட்டு வீரர்களை பார்த்தவுடன் மிகுந்த மகிழ்ச்சியுடன் சிரிப்பது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
















