விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே பள்ளிவாசலுக்குச் சென்ற இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற இளைஞர் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டார்.
விருதுநகரை சேர்ந்த இளம் பெண் ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நரிக்குடியில் உள்ள பள்ளிவாசலுக்கு அவரது பெற்றோர் அழைத்துச் சென்றனர்.
அப்போது அங்குப் பணிபுரிந்த அப்துல் அஜூஸ் என்பவர் பெண்ணுக்குப் பாலியல் தொல்லை அளித்ததோடு அவரை சரமாரியாகத் தாக்கினார்.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் நரிக்குடி காவல்நிலையத்தில் புகாரளித்தனர். அதன் பேரில் விசாரணை மேற்கொண்ட போலீசார் அப்துல் அஜூஸை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையின் பேரில் அப்துல் அஜூஸ் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
















