நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் வகுப்பறையில் மாணவிகள் மது அருந்திய காட்சி வெளியானதை அடுத்து 6 மாணவிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பாளையங்கோட்டையில் செயல்படும் அரசு உதவி பெறும் மகளிர் பள்ளியில், ஏராளமான மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தநிலையில் அப்பள்ளியின் 9ம் வகுப்பு மாணவிகள் சிலர், வகுப்பறையில் மதுபானம் அருந்தினர்.
இந்தக் காட்சியை சக மாணவி ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். மேலும் அவர்கள், வகுப்பறையில் போதையில் தள்ளாடிய காட்சி கல்வியாளர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தியது.
இது தொடர்பாகச் சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகத்திடம், காவல்துறை தகவல் அளித்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட மாணவிகள் 6 பேரை இடைநீக்கம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார்.
இதனிடையே மாணவிகளுக்கு மதுபானம் விற்பனை செய்தவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.
















