சேலம் மேட்டூர் கூட்டுக் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் கடந்த மூன்று நாட்களாகச் சாலையில் தண்ணீர் கொட்டி வீணாகி வருவதாக மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
கொண்டலாம்பட்டி 48-வது வார்டில் இருந்து 60வது வார்டு வரையிலான மக்களுக்கு மேட்டூர் கூட்டு குடிநீர் திட்டம் மூலமாகக் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
நெத்திமேடு பகுதியில் கழிவுநீர் கால்வாய் பணியின்போது குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், கடந்த 3 நாட்களாகப் பல லட்சம் லிட்டர் குடிநீர் சாலையில் பாய்ந்து வீணாகி வருகிறது.
அதே வேளையில், 12 வார்டு மக்களுக்குக் குடிநீர் வினியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் அவதியடைந்த மக்கள், குழாயில் உள்ள உடைப்பை சரிசெய்து குடிநீர் வழங்க வேண்டுமென அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
















