ஈராக்கில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட கடும் சேதங்களால் மக்கள் கண்ணீர் சிந்துகின்றனர்.
பருவநிலை மாற்றம் சர்வதேச அளவில் மிகப்பெரிய பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. இதன்காரணமாக உலகின் பல நாடுகளில் பருவம் தவறிய மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்பட்டு வருகின்றன.
அந்த வகையில் ஈரானில் பல ஆண்டுகளாக வறட்சியை சந்தித்து வந்த சுலைமானியா, கிர்குக் மற்றும் நினேவா, தெற்கு பராஸ் போன்ற மாகாணங்களில் திடீரென கனமழை கொட்டித் தீர்த்தது.
இதனால் ஏற்பட்ட வெள்ளம் பெரும்பாலான பகுதிகளை மூழ்கடித்தது. குறிப்பாக மளிகை கடை ஒன்றுக்குள் வெள்ளம் புகுந்த காட்சி வெளியாகியுள்ளது.
















