மதுரை உசிலம்பட்டி அருகே சாலை விபத்தில் ராணுவ வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேப்பம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்வபாண்டியன் ராணுவத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில் விடுமுறைக்காகச் சொந்த ஊருக்கு வந்திருந்த அவர், இருசக்கர வாகனத்தில் சென்றபோது லாரி மோதிப் பரிதாபமாக உயிரிழந்தார்.
அவரது உடலுக்கு ராணுவ அதிகாரிகள் மலர் வளையம் அஞ்சலி செலுத்தினர். தொடர்ந்து இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு செல்வ பாண்டியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
















