தாய்லாந்து – கம்போடியா நாடுகள் மோதலை நிறுத்திக் கொள்ள ஒப்புக் கொண்டுள்ளன என அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
தென் கிழக்கு ஆசிய நாடுகளான தாய்லாந்து – கம்போடியா இடையே நுாற்றாண்டுகளுக்கும் மேலாக எல்லை பிரச்னை நீடித்து வருகிறது.
கடந்த ஜூலையில் வெடித்த மோதலில் 43 பேர் கொல்லப்பட்டனர். அமெரிக்க அதிபர் டிரம்ப் முயற்சியால் இரு நாடுகளுக்கிடையே கடந்த அக்டோபரில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது.
இதனிடையே இந்தச் சூழலில் சில தினங்களுக்கு முன்பு, அமைதி ஒப்பந்தத்தில் விரிசல் ஏற்பட்டதால் இரு நாடுகளும் மீண்டும் தாக்கிக் கொள்கின்றன.
இந்நிலையில் தாய்லாந்து – கம்போடியா இடையே மீண்டும் போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டுள்ளது என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.
















