உத்தரகாண்ட்டில் இந்திய ராணுவ அகாடமியில் பயிற்சி நிறைவு அணிவகுப்புக்கு பிறகு வீரர்கள் ஒன்றாக இணைந்து புஷ் அப் எடுத்தனர்.
டேராடூனில் இந்திய ராணுவ அகாடமியின் புகழ்பெற்ற செட்வோட் அணிவகுப்பு திடல் உள்ளது. அங்கு வீரர்களின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நடைபெற்றது. இதில் ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி கலந்து கொண்டார்.
இதனைதொடர்ந்து இளம் அதிகாரிகளுடன் சேர்ந்து, உபேந்திர திவேதி புஷ்-அப்ஸ் செய்தார். இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், வீரர்கள் அனைவருக்கும் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
















