இந்தியாவில் ஆண்டுக்கு இரண்டரை லட்சம் பேர் கிட்னி செயலிழப்பால் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
சிறுநீரகம் என்பது மனித உடலில் பெரும் முக்கியத்துவம் கொண்டது. நமது உடலில் உற்பத்தியாகும் நச்சுப்பொருட்களை வெளியேற்றுகிறது.
நாம் உட்கொள்ளும் மருந்து, மாத்திரைகளில் நச்சுக்கள் இருந்தால் அவற்றையும் சிறுநீர் மூலமாக வெளியேற்றுகிறது. தினமும் நமது இரண்டு சிறுநீரகங்களும் மொத்தமாக 150, 180 லிட்டர் ரத்தத்தை சுத்தப்படுத்துகிறது.
சிறுநீரக நோய் பாதிப்புகளை பொறுத்த வரையில் தொடக்கத்தில் எந்த அறிகுறியையும் ஏற்படுத்துவதில்லை.
குழந்தைகளுக்குக் கிரியாட்டினின் அளவு 2.0 மில்லி கிராமிற்கு அதிகமாகவும், பெரியவர்களுக்கு 5.0 மில்லி கிராமிற்கு அதிகமாகவும் இருந்தால் அவர்களது கிட்னி என்னும் சிறுநீரகம்கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம்.
கட்டுப்படாத சர்க்கரை நோய், கட்டுப்பாட்டில் இல்லாத ரத்த அழுத்தம், புகை பிடித்தல், மது அருந்துதல், சிறுநீரக தொற்றுகள், சிறுநீரக கற்கள், உடற்பருமன், காசநோய், வலி நிவாரணி மாத்திரைகளின் பக்க விளைவு, உணவு நச்சுக்கள், புரோட்டஸ்ட் வீக்கம், புற்றுநோய் போன்றவை சிறுநீரகம் பாதிப்பதற்கான முக்கிய காரணங்கள் என்கின்றனர் மருத்துவர்கள்.
















