இலங்கையின் வவுனியா மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் சுமார் 60 ஆயிரம் ஏக்கரிலான நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
“டிட்வா” புயல் காரணமாக இலங்கையில் அண்மையில் வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்தது. இதன் காரணமாக வவுனியா மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன.
இதனால் நீர்நிலைகளில் இருந்து வெளியேறும் உபரிநீர், சுமார் 60 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான விளைநிலங்களில் தேங்கி உள்ளது.
இதனிடையே மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஹெக்டேருக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
















