கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் அரசுப் பள்ளி கட்டடத்தை இடிக்கும் பணியின்போது, சுவர் இடிந்து விழுந்து கூலித்தொழிலாளி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஓசூர் அடுத்த குருப்பட்டி பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில், பயன்பாட்டில் இல்லாத கட்டடங்களை இடிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருந்தது.
அப்போது, எதிர்பாராத விதமாகக் கூலித்தொழிலாளி மீது சுவர் இடிந்து விழுந்தது. இதில், ஆந்திராவை சேர்ந்த சீனப்பா என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
















