சேலத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசி மக்களை அச்சுறுத்தி வந்த இரண்டு ரவுடிகளை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
அழகாபுரம் அருகே பெரியபுதூரை சேர்ந்த ரவுடி சந்தோஷ் குமார், தனக்கு பிடிக்காதவர்கள் மீது பெட்ரோல் குண்டுகளை வீசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
முன்னதாக இலவசமாகச் சில்லி சிக்கன் தர மறுத்ததால் கடை மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட அவர், வெளியே வந்து மீண்டும் அதையே செய்திருக்கிறார்.
கடந்த நவம்பர் 30ம் தேதி இரண்டு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசியதாக வழக்குப்பதிவு செய்த போலீசார், சந்தோஷ் குமாரையும், அவரது கூட்டாளியான அருண்குமாரையும் கைது செய்தனர்.
இந்நிலையில், பொது அமைதிக்கு தொடர்ந்து குந்தகம் விளைவித்து வந்ததாகக் காவல் ஆணையர் உத்தரவின் அடிப்படையில் இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
















