கேரள வாழ் தமிழர்களின் வாக்குகளை குறிவைத்து கேரள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட திமுக, ஒரு வார்டில் கூட வெற்றி பெற முடியாமல் துடைத்தெறியப்பட்டுள்ளது.
கேரளாவில் சமீபத்தில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், தங்களுக்கு சாதகமான இடங்கள் என நினைத்து ஒருசில வார்டுகளில் மட்டும் திமுக போட்டியிட்டது.
குறிப்பாக எல்லை மாவட்டமான இடுக்கியின் உப்புதரா ஊராட்சியில் ஒன்பது இடங்களிலும், சின்னக்கானல் ஊராட்சியில் மூன்று இடங்களிலும், தேவிகுளம் மற்றும் மறையூர் ஊராட்சிகளில் தலா ஒரு இடமும், தேவிகுளம் ஊராட்சி ஒன்றியத்தில் ஒரு இடமும் என 15 வார்டுகளில் திமுக முதன்முறையாகப் போட்டியிட்டது. அதேபோல் அதிமுகவும் 25 இடங்களில் போட்டியிட்டது.
ஆனால் எதிர்பாராத விதமாக இரண்டு கட்சிகளும் ஒரு வார்டை கூடக் கைப்பற்றாமல் வெளியேறின.
















