கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே சாலையின் தடுப்பு சுவர்மீது தனியார் பேருந்து மோதிய விபத்தில் 22 பேர் காயமடைந்தனர்.
கோவையில் இருந்து களியக்காவிளை நோக்கித் தனியார் பேருந்து புறப்பட்டுச் சென்றது. அதிகாலை, தோவாளை அருகே சென்றபோது சாலையின் தடுப்பு சுவர் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில், பேருந்தில் பயணம் செய்த 22 பயணிகள் காயமடைந்தனர். இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பேருந்து விபத்தால் நாகர்கோவில் – நெல்லை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
















