புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டையில் விவசாயிடம் லஞ்சம் வாங்கிய விவகாரத்தில் கைது செய்யப்பட்ட காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
ஆதனக்கோட்டையில் நிலத்தகராறில் சிஎஸ்ஆர் போடுவதற்கு விவசாயிடம் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளர் சங்கரை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும், களவுமாகக் கைது செய்தனர்.
பின்னர், காவல் உதவி ஆய்வாளர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், சங்கரை பணியிடை நீக்கம் செய்து திருச்சி ஐஜி ஜோஷி நிர்மல்குமார் உத்தரவிட்டுள்ளார்.
















