பாஜக முன்னாள் நிர்வாகி கே.ஆர்.வெங்கடேசின் குடும்பத்தினரை துன்புறுத்தக் கூடாது எனக் காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பாஜக முன்னாள் நிர்வாகியான கே.ஆர்.வெங்கடேஷ், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், விசாரணை என்ற பெயரில், நள்ளிரவில் போலீசார் வீட்டிற்கு வருவதாகவும், தன் குடும்பத்தினரை துன்புறுத்துவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, வெங்கடேசின் குடும்பத்தினரை துன்புறுத்தக் கூடாது எனக் காவல்துறைக்கு உத்தரவிட்டார்.
















