கால்நடைகளுக்கு வேகமாகப் பரவி வரும் தோல்கட்டி நோயைக் கட்டுப்படுத்த 10 லட்சம் கால்நடைகளுக்குத் தடுப்பூசி போடத் திட்டமிடப்பட்டுள்ளது என்று பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது.
தோல் கட்டி நோய் என்பது பூச்சிகள் மூலம் பரவும் ஒரு வைரஸ் தொற்று ஆகும். இது கால்நடைகளுக்குக் கொப்புளங்களை ஏற்படுத்தி, பால் உற்பத்தியைக் குறைத்து, பெரும் பொருளாதார இழப்பை ஏற்படுத்துகிறது. இந்த நோய் மனிதர்களுக்குப் பரவாது என்பது குறிப்பிடத்தக்கது.
















