திருப்பத்தூர் மாவட்டம், பேராம்பட்டில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்கத் தவறியது தொடர்பாக, அறநிலையத்துறை ஆணையர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கேசவ பெருமாள் கோயில் நிலங்களை மீட்க கடந்த 2023ல் அறநிலையத்திற்கு உத்தரவிடப்பட்டது.
ஆனால் இதுவரை அந்த உத்தரவை அறநிலையத்துறை நிறைவேற்றவில்லை. எனவே இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்து வரும் தலைமை நீதிபதி அமர்வு, அறநிலையத்துறை ஆணையர், இணை ஆணையர் உள்ளிட்ட நான்கு அதிகாரிகளும் ஜனவரி 12ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது.
















