அடுப்பு ஊதும் பெண்களுக்குப் படிப்பு எதற்கு என்ற காலம் மாறி, பெண்கள் பல துறைகளில் சாதித்து வருவதாகப் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பாமக இணை பொதுச்செயலாளரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஏ.கே.மூர்த்தியின் இல்லத் திருமண விழா, சென்னை திருவான்மியூரில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் தனது மனைவியுடன் கலந்துகொண்ட ராமதாஸ், திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர் மேடையில் பேசிய அவர், ஏ.கே.மூர்த்தி சமூகத்திற்கு மட்டுமின்றி கட்சிக்கும் பெருமை சேர்த்தவர் என்று புகழாரம் சூட்டினார்.
மேலும், அடுப்பு ஊதும் பெண்களுக்கு படிப்பு எதற்கு என்ற காலம் மாறி, பெண்கள் பல துறைகளில் சாதித்து வருவதாகக் குறிப்பிட்ட ராமதாஸ், இருவரும் சமுதாயத்திற்கு சேவை செய்ய வேண்டும் என்று வாழ்த்தினார்.
















