சேலம் மாவட்டத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் கல்வி கற்றோருக்கு நடத்தப்பட்ட தேர்வில் அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
பதினைந்து வயதிற்கு மேல் எழுதப் படிக்க தெரியாத 69 ஆயிரத்து 714 பேருக்கு, இத்திட்டத்தின் கீழ் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு ஆகியவை தன்னார்வலர்களைக் கொண்டு கற்பிக்கப்பட்டது.
இந்த நிலையில் பயிற்சி வகுப்புகள் முடிந்து இன்று தேர்வு நடைபெற்றது. இதல் சேலம் நகர்ப்புறத்தில் மட்டும் 72 மையங்களில் சுமார் ஆயிரத்து 694 பேர் தேர்வெழுதினர்.
தேர்வினை வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வள மேற்பார்வையாளர்கள், ஆசிரியர், பயிற்றுநர்கள் ஆகியோர் பார்வையிட்டனர். தேர்வு முடிவில் அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.
















