கோவை மாவட்டம் ஆனைமலையில் தரைப்பாலம் பழுதாகி சாலையை சூழ்ந்து வெள்ள நீர் செல்வதால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
சுள்ளிமேட்டுப்பதி, வெப்பறை பகுதிகளில் உள்ள விளை நிலங்களில் இருந்து வரும் உபரி நீரானது, அப்பகுதியில் உள்ள தரைப்பாலத்தின் வழியாகச் சென்று ஆழியாற்றில் கலக்கிறது.
இதனிடையே, தரைப்பாலம் பழுதானதால் அடைப்பு ஏற்பட்டு சாலையை சூழ்ந்து வெள்ள நீர் செல்கிறது.
இதனால் அவ்வழியாகச் செல்லும் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.
இந்நிலையில், புதிய தலைப்பாலம் அமைத்துத் தர வேண்டுமென அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
















