ரயில்வேயில் புதிய புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் மணிக்கு ஆயிரம் கிலோ மீட்டருக்கும் அதிகமான வேகத்தில் பயணிக்கக்கூடிய Vacuum Hyperloop Train-ஐ சீனா சோதனை செய்துள்ளது.
விமானத்தைவிட வேகமாக, நிலத்தில் செல்லும் அதிவேக போக்குவரத்து அமைப்பாக உருவெடுக்க உள்ள ஹைப்பர் லூப் தொழில்நுட்பம் குறித்து, பல்வேறு நாடுகள் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளன.
அந்த வகையில் சீனாவும் ஹைப்பர் லூப் தொழில்நுட்பத்தில் ரயில் சேவை தொடங்க முனைப்பு காட்டி வருகிறது. ஷாங்காய் – ஹாங்சோ இடையே இதற்கான சோதனையை சீனா மேற்கொண்டுள்ளது.
ரயிலை வெற்றிடக் குழாய்க்குள் இயக்குவதால், காற்றில் ஏற்படும் உராய்வு முழுவதுமாகக் குறைக்கப்பட்டு, ஒலியை விட அதிகமான வேகத்தில் செல்ல ஹைப்பர் லூப் தொழில்நுட்பம் வழி வகுக்கிறது.
இதனால் சுமார் 200 கிலோ மீட்டர் தூரம் கொண்ட ஷாங்காய் – ஹாங்சோ நகரங்களுக்கு இடையேயான பயண நேரம் 9 நிமிடங்கள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
















