பிரான்ஸ் நாட்டில் நடிகர் ரஜினிகாந்தின் படைப்பா படம் ரீ ரிலிஸ் செய்யப்பட்ட நிலையில் ஏராளமான ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து படத்தைப் பார்த்தது வைரலாகி உள்ளது.
தமிழ் திரையுலகில் உச்சபட்ச நடிகராக வலம் வருபவர் ரஜினிகாந்த். அவர் திரையுலகில் அறிமுகமாகி 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை கொண்டாடும் வகையில் அவரின் 75வது பிறந்தநாள் அன்று அவர் நடித்துச் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த படையப்பா திரைப்படம் கடந்த 12ம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.
தமிழகம், கர்நாடகா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் படையப்பா படம் ரீ ரிலிஸ் செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் பிரான்ஸிலும் ரீ ரிலீஸ் செய்யப்பட்ட படையப்பா படத்தை ஏராளமான ரசிகர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பார்த்தனர்.
பிரான்ஸில் திரையரங்கில் ரஜினிகாந்தின் பிறந்த நாளை ஏராளமான ரசிகர்கள் கேக் வெட்டி உற்சாகமாகக் கொண்டாடினர்.
தொடர்ந்து ரீ ரிலிஸ் செய்யப்பட்ட படையப்பா படத்தை ரசிகர்கள் ஆட்டம் பாட்டம் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
















