ஆஸ்திரேலியாவின் சிட்னியில் நடைபெற்ற ஹனுக்கா கொண்டாட்டத்தின்போது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போன்டி கடற்கரையில் ஏராளமான யூத மக்கள் கூடியிருந்தனர்.
ஹனுக்கா கொண்டாட்டத்திற்காகக் கூடியிருந்த நிலையில், அங்கு வந்த பயங்கரவாதிகள் இரண்டு பேர் அவர்களை குறி வைத்துத் துப்பாக்கிச்சூடு நடத்தினர்.
இந்த சத்தத்தை கேட்டுக் கடற்கரையில் கூடியிருந்த பலரும் அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர். இந்தத் தாக்குதலில் ஏற்கனவே 12 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், சிகிச்சையில் இருந்த மேலும் 4 பேர் உயிரிழந்ததால் பலி எண்ணிக்கை 16 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்ட நபரை சிட்னி போலீசார் அடையாளம் கண்டுள்ளனர். 24 வயதான நவீத் அக்ரம் என்ற அந்த நபர் பாகிஸ்தானை சேர்ந்தவர் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.
அவர் மத்திய குயின்ஸ்லாந்து பல்கலைக் கழகத்தில் படித்தவர் என்பதும் தெரியவந்துள்ளது. இஸ்லாமாபாத்தில் உள்ள ஹம்தார்ட் பல்கலைக்கழகம் மற்றும் அல் முராத் நிறுவனத்துடனும் அவர் தொடர்புடையவர் என்றும் கூறப்படுகிறது.
















