ஆஞ்சநேயர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நாமக்கல் கோயிலில் ஒரு லட்சத்து 8 வடைகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பதாக நடைபெற்று வருகிறது.
நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் வரும் 19ஆம் தேதி ஜெயந்தி விழா கோலாகலமாகக் கொண்டாடப்படவுள்ளது.
இந்த விழாவை முன்னிட்டு கோயில் வளாகத்தில் உள்ள மண்டபத்தில் ஒரு லட்சத்து 8 உளுந்து வடைகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
2 ஆயிரத்து 250 கிலோ உளுந்தம் மாவு, 600 லிட்டர் நல்லெண்ணெய், 32 கிலோ மிளகு, 32 கிலோ சீரகம், 82 கிலோ உப்பு ஆகிய பொருட்களை கொண்டு வடைகள் தயாரிக்கப்படுவதாகவும், இந்தப் பணியில் ஸ்ரீரங்கத்தில் இருந்து வந்துள்ள 35 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
















