ராமநாதபுரம் அருகே கோவில் ஊரணியில் குளிக்கச் சென்ற தாய் – மகன் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவை சேர்ந்த பென்சலம்மாள், தனது கணவர் மற்றும் இருமகன்களுடன் குயவன் குடி கிராமத்தில் உள்ள சுப்பையா கோயிலுக்குச் சென்றுள்ளார்.
கோயில் ஊரணியில் குளித்துக் கொண்டிருந்தபோது, அவரது இரு மகன்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த பென்சலம்மாள், மகன்களை காப்பாற்ற தண்ணீரில் குதித்துள்ளார்.
ஒரு மகனை காப்பாற்றிய அவர், மற்றொரு மகனை காப்பாற்ற முயன்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
















