திருவண்ணாமலை மாவட்டம், மாலப்பம்பாடியில் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்வின் காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலில் அனைத்து வாகனங்களும் சிக்கிக் கொண்டதால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
மாலப்பம்பாடியில் திமுக வடக்கு மண்டல இளைஞரணி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் காரணமாக அந்த வழியாகச் சென்ற அனைத்து வாகனங்களும் நெரிசலில் சிக்கிக் கொண்டன.
ஆனால், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், திமுகவினர் மட்டும் நெரிசலில் சிக்கிக் கொள்ளாமல் இருப்பதற்காக வழியை விலக்கிக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதனால் ஒரு மணி நேரத்துக்கும் மேலாகக் காத்திருக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டதால் பயணிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர்.
இதனிடையே காலதாமத்தால் பசி பொறுக்க முடியாத அரசுப் பேருந்து ஓட்டுநர், பேருந்திலேயே அமர்ந்து சாப்பிடும் நிலைக்குத் தள்ளப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியானதால் திமுகவினர் விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளனர்.
















