மொராக்கோவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 21 பேர் உயிரிழந்தனர். கடந்த 7 ஆண்டுகளாக மழையின்றி வறட்சி நிலவி வருகிறது.
இந்தச் சூழலில், கடந்த சில தினங்களாக அந்நாட்டில் கனமழை மற்றும் அதிக பனிப்பொழிவு நிலவி வருகிறது.
கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி பொதுமக்கள் 21 பேர் உயிரிழந்ததாக மொராக்கோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், 30க்கும மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
















