மத்திய அரசின் உமீத் இணையதளத்தில் வக்பு சொத்துகளை டிஜிட்டல் முறையில் பதிவு செய்வதில் உத்தரபிரதேசம் முதலிடத்தில் உள்ளது.
அதன்படி, சன்னி பிரிவில், 86 ஆயிரத்து 347, ஷியா பிரிவில், 6 ஆயிரத்து 485, சொத்துகள் அடங்கும். மாவட்ட வாரியாக, ஷியா பிரிவில், 625 பதிவுகளுடன் லக்னோ முதலிடத்தில் உள்ளது.
சன்னி பிரிவில் 4 ஆயிரத்து 940 பதிவுகளுடன் பாராபங்கி முதலிடத்தில் உள்ளது. இவ்வாறு மொத்தம் 92 ஆயிரத்து 832 வக்பு சொத்துகளை உத்தரபிரதேச அரசு பதிவு செய்திருக்கிறது.
















