ஓய்வுபெற்ற ஐஐடி விஞ்ஞானியான ராமசாமி என்பவரை டிஜிட்டல் அரஸ்ட் செய்து 57 லட்சம் ரூபாய் மோசடி செய்த விவகாரம் தொடர்பான விசாரணையை சென்னை சைபர் கிரைம் போலீசார் தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஓய்வுபெற்ற சென்னை ஐஐடி விஞ்ஞானியும், பத்மபூஷன் விருதாளருமான ராமசாமி என்பவர் ஐஐடியின் சிஎல்ஆர்ஐ நிறுவனத்தில் சிறப்பு வகுப்பு பேராசிரியராக மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து வருகிறார்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு ராமசாமியின் செல்போனில் தொடர்பு கொண்ட மர்மநபர், தங்களது செல்போன் எண் வடமாநிலத்தில் குற்ற சம்பவத்தில் தொடர்பு படுத்தப்பட்டுள்ளதாகவும், அதன் பேரில் தங்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் கூறி மிரட்டியுள்ளனர்.
மேலும், ஆன்லைன் வாயிலாக விசாரிக்க வேண்டுமென கூறி, “டிஜிட்டல் அரெஸ்ட்” செய்து அவரது வங்கி கணக்கில் இருந்து 57 லட்சம் ரூபாய் பணத்தை மோசடி செய்துள்ளனர்.
இது தொடர்பாக ராமசாமி அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 3 மாதங்களாக எவ்வித துப்பும் கிடைக்காததால், இதேபாணியில் மோசடியில் ஈடுபட்ட வடமாநில குற்றவாளிகளின் தகவல்களை கேட்டு பெற்று அவர்களை கைது செய்யும் நடவடிக்கையில் சைபர் கிரைம் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
















