சூடானில் நடைபெற்ற ட்ரோன் தாக்குதலில் 6 வங்கதேச வீரர்கள் கொல்லப்பட்டதற்கு ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், உயிரிழந்த வங்கதேச வீரர்களின் குடும்பங்களுக்கு இரங்கல் கூறியுள்ளார்.
இத்தகைய தாக்குதல்கள் நியாயப்படுத்த முடியாதவை என்றும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டிக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
















