சிறைக் கைதிகளின் SIR படிவங்களை, அவர்களது ரத்த சொந்தங்கள் பூர்த்தி செய்து வழங்கலாம் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் முடிவடைந்த நிலையில், டிசம்பர் 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், சிறைக் கைதிகளிடமும் SIR பணிகளை மேற்கொள்ள தேர்தல் ஆணையம், தமிழக அரசுக்கு உத்தரவிடக்கோரி, மதுரையை சேர்ந்த நபர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
வழக்கானது தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சிறைக் கைதிகளின் SIR படிவங்களை, அவர்களது ரத்த சொந்தங்கள் பூர்த்தி செய்து வழங்கலாம் என தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விளக்கத்தை மனுவாகத் தாக்கல் செய்யத் தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை இரண்டு வாரங்களுக்குத் தள்ளிவைத்தனர்.
















