கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே தொழிலதிபரை மிரட்டிய திமுக நிர்வாகி உட்பட 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பனப்பாக்கம் பகுதியை சேர்ந்த கார்த்திக் குப்தா என்ற முந்திரி தொழிலதிபர், தனது நிலத்தை விற்பனை செய்வது தொடர்பாக, ரியல் எஸ்டேட் நிறுவனத்தை அணுகியுள்ளார். அதில் பிரச்னை இருந்ததால், நிலத்தை விற்பனை செய்ய முடியவில்லை.
இந்தநிலையில் திமுக பேரூராட்சி செயலாளர் சுந்தர வடிவேல் உள்ளிட்டோர் நிலத்தை விற்றுத்தர 20 லட்சம் கமிஷன் தொகை வழங்க வேண்டும் எனக் கார்த்திக் குப்தாவிடம் தெரிவித்துள்ளனர்.
எனினும் அவர் மறுத்ததால் கார்த்திக் குப்தாவை திமுக பிரமுகர்கள் மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகக் காவல்துறை நடவடிக்கை எடுக்காததால் கார்த்திக் குப்தா பண்ருட்டி நீதிமன்றத்தை அணுகினார்.
இதையடுத்து நீதிமன்ற உத்தரவுப்படி திமுக பேரூராட்சி செயலாளர் சுந்தர வடிவேல் மற்றும் ராஜாராம் ஆகியோர் புதுப்பேட்டை காவல்நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
















