கோவை சிங்காநல்லூரில் ரயில் நிலையத்திற்கு செல்லும் பாதையைச் சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதற்கான அவசியம் என்ன என்பது குறித்து இந்தச் செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்.
கோவை சிங்காநல்லூர் ரயில் நிலையத்தை, கல்வி, வேலை, தொழில் எனப் பல்வேறு தேவைகளுக்காகப் பலரும் பயன்படுத்தி வருகின்றனர். எனினும் ரயில் நிலையத்திற்கு செல்லும் பாதை, புதர் மண்டியும், தெருவிளக்குகள் இல்லாமலும் காணப்படுவதால் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகப் பயணிகள் தெரிவிக்கின்றனர்.
சிங்காநல்லூர், ஒண்டிபுதூர், இருகூர், எஸ்ஏஎச்எஸ் காலனி, டீச்சர்ஸ் காலனி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் சிங்காநல்லூர் ரயில் நிலையத்தைப் பயன்படுத்தி வருகின்றனர். ரயில் நிலையத்தில இருசக்கர வாகன பாதுகாப்பகம் இல்லாததால், சிரமத்தை எதிர்கொள்வதாகக் கூறுகின்றனர்.
ரயில் நிலைய பாதையில் போதிய பாதுகாப்பு இல்லாததால், பயணிகள் தண்டவாளத்தைக் கடக்கும் சூழல் நிலவுவதாகவும், இதனால் விபத்து ஏற்படும் அபாயம் நிலவுவதாகக் கூறுகிறார் இவர்.
சிங்கநல்லூர் ரயில் நிலையத்தைப் பாதுகாப்பானதாக மாற்றவும், சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
















