திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோயிலில் தெப்ப திருவிழா ஒருமணி நேரம் காலதாமதமாகத் தொடங்கியதால் பக்தர்கள் அவதிக்குள்ளாகினர்.
எனினும், பக்தர்கள் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் நான்கு பக்க குளக்கரையில் அமர்ந்திருந்து பக்தி பரவசத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர்.
சுவாமி மூன்று முறை வலம் வந்ததும், வடக்கு மாட வீதி மற்றும் தெற்கு மாட வீதியாக மீண்டும் கோயிலைச் சென்றடைந்தார்.
















