சென்னை நொளம்பூரில் கவரிங் நகைக்காக மூதாட்டி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நொளம்பூரை சேர்ந்த மேரி என்ற 70 வயது மூதாட்டி, தனியாக வசித்து வந்தார். இவரது வீட்டில் இருந்து கூச்சல் சத்தம் கேட்டதால், சக குடியிருப்பு வாசிகள் அங்குச் சென்று பார்த்துள்ளனர். அப்போது மூதாட்டி மயக்க நிலையில் இருந்துள்ளார்.
அச்சமயத்தில் அங்கிருந்து தப்பியோட முயன்ற ஏழுமலை என்பவரை பிடித்த பொதுமக்கள், அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதனிடையே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மூதாட்டி ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
விசாரணையில் மது அருந்துவதற்காக மூதாட்டியை தாக்கிவிட்டு நகைப்பறித்ததாக ஏழுமலை போலீசாரிடம் வாக்குமூலம் அளித்தார். பறிமுதல் செய்யப்பட்ட நகை, கவரிங் எனப் போலீசார் தெரிவித்தனர்.
















