திருச்சி மாவட்டம் உறையூரில், கட்டத்தின் மீது ஏறித் தற்கொலைக்கு முயன்ற பெண்ணை ஊழியர் ஒருவர் சாதுர்யமாமக பேச்சு கொடுத்துக் காப்பாற்றினார்.
உறையூர் அண்ணாமலை நகரில் வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் கடையில் சோனியா என்பவர் பணியாற்றி வருகிறார்.
இவர் திடீரெனக் கட்டடத்தின் உச்சியில் ஏறித் தற்கொலைக்கு முயன்றார். அப்போது அங்கிருந்தவர்கள் கீழே இறங்குமாறு கூறியும் அதனை அவர் ஏற்கவில்லை.
அந்தக் கடையில் பணியாற்றும் ஊழியர், அப்பெண்ணிடம் சாதுர்யமாகப் பேச்சு கொடுத்தது கொண்டே, அங்குச் சென்று காப்பாற்றினார்.
குடும்ப பிரச்னை காரணமாக அப்பெண் தற்கொலைக்கு முயன்றது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
















