ஜெர்மனியில் அச்சமூட்டும் கொடூர பேய் கதாபாத்திரங்களின் உடையணிந்த ஊர்வலமாக செல்லும் கிராம்பஸ் அணிவகுப்பு நிகழ்வு நடைபெற்றது.
உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது உற்சாகமான சாண்டா கிளாஸ் பாரம்பரியமே கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தென் ஜெர்மனியின் முனிச் நகரில் அச்சமூட்டும் கிராம்பஸ் என்ற பேய் கதாபாத்திரங்களின் வருடாந்திர அணிவகுப்பு நடைபெற்றது.
மத்திய ஆல்பைன் நாட்டுப்புறக் கதைகளில் வரும் பேய்த்தன்ம கொண்ட கதாபாத்திரங்கள் கிராம்பஸ் என அழைக்கப்படுகிறது. தவறாக நடந்து கொள்ளும் குழந்தைகளை கிராம்பஸ் கண்டுபிடித்து அவர்களை பிர்ச் மரக்குச்சியால் தண்டனை வழங்குவது அல்லது மிரட்டுவது என கூறப்படுகிறது.
இதனை வழக்கமாக கொண்டு முனிச் நகரில் நடத்தப்பட்ட கிராம்பஸ் அணிவகுப்பு ஊர்வலத்தில் ஆடு கொம்புகள், நீண்ட நாக்கு போன்ற அச்சமூட்டும் வகையில் பங்கேற்றனர். நகரின் முக்கிய வீதிகளில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தை பலரும் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்.
















