அம்மாபேட்டை அருகே வீட்டின் முன்பு திருப்பரங்குன்றம் சம்பவத்தை பேசிக் கொண்டிருந்த பாஜக நிர்வாகி மீது ஏழு பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், அம்மாபேட்டை பகுதியைச் சேர்ந்த நாகராஜ் என்பவர் பாஜக ஓபிசி அணியின் மாவட்ட துணை தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார்.
இரவு 9 மணியளவில் தனது வீட்டு வாசல் முன்பு திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக மனைவி மற்றும் உறவினர்களுடன் நாகராஜ் பேசி கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு வந்த காங்கிரஸ் நிர்வாகி, நாகராஜ் மற்றும் அவரின் குடும்பத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
பின்னர், திமுக மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் 7 பேரை அழைத்து வந்து நாகராஜ் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோரை சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில், காயமடைந்த நாகராஜ் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜக நிர்வாகிகள் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.
















