திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே அரசு பேருந்தில் ஏற்ற மறுத்ததாக கூறி பெண் ஒருவர் தனது உறவினருடன் சேர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார்.
திண்டுக்கல்லை சேர்ந்த வினிதா என்பவர் நத்தம் செல்வதற்காக அரசு பேருந்து ஒன்றில் ஏற முயன்றார். அப்போது அவரை தடுத்த நடத்துநர், இந்த பேருந்து நத்தம் செல்லாது என தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதன் பேரில் வேறு பேருந்தில் சென்ற வினிதா நத்தம் பேருந்து நிறுத்ததில் இறங்கியவுடன், இவர் ஏற முயன்ற அதே பேருந்து நத்தம் வந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து கேள்வி எழுப்பிய பெண்ணிடம் முறையாக பதிலளிக்காத நடத்துநர் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை கண்டித்த பெண் மற்றும் அவரது உறவினர்கள் பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர்.
















