திருவள்ளூர் மாவட்டம் திருவேற்காட்டில் டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அன்னை அபிராமி நகர் அருகே புதிதாக அரசு மதுபான கடை அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோயில் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு அருகே டாஸ்மாகக் கடை அமைக்கக் கூடாது என்று அவர்கள் வலியுறுத்தினர்.
















