நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல், சோனியா காந்திக்கு எதிரான ED புகாரை டெல்லிச் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
அண்மையில் நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கு தொடர்பாக ராகுல்காந்தி, சோனியா மீது புதிய வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில், நேஷனல் ஹெரால்டு பண மோசடி வழக்கில் ராகுல்காந்தி, சோனியா காந்தி மீதான அமலாக்கத்துறையின் புகாரை டெல்லிச் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
எப்.ஐ.ஆர் பதிவு செய்யாமல் ஈ.சி.ஐ.ஆர் பதிவு செய்து அமலாக்கத்துறையால் பணமோசடி வழக்கைத் தொடங்க முடியாது என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
















