ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில் மார்கழி மாத பிறப்பையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலில், மார்கழி மாத பிறப்பையொட்டி தங்கக்குறடு மண்டபத்தில் ஆண்டாள், ரெங்கமன்னார் எழுந்தருளினர்.
அப்போது, 30 திருப்பாவைகள் கொண்ட தங்க இழைகளால் நெய்யப்பட்ட புடவை ஆண்டாளுக்குச் சாற்றப்பட்டது.
இதனை அடுத்து சுவாமிக்கும் அம்பாளுக்கும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, வெள்ளிக்குறடு மண்டபத்தில் எழுந்தருளிய ஆண்டாள், ரெங்கமன்னார் முன்னிலையில் பக்தர்கள் திருப்பாவைப் பாடினர். இந்த நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
















