சென்னை அம்பத்தூரில் மர்மமான முறையில் உயிரிழந்த காவல் உதவி ஆய்வாளரின் உடலை அடக்கம் செய்ய மறுப்பு தெரிவித்து அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர்.
விருதுநகரை சேர்ந்த அந்தோணி மாதா என்பவர் அம்பத்தூரில் காவல் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வந்தார்.
இவர் மர்மமான முறையில் உயிரிழந்ததாகக் கூறப்படும் நிலையில் சென்னையில் வைத்து பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
பின்னர் அந்தோணி மாதாவின் உடல் அடக்கம் செய்வதற்காகச் சொந்த ஊருக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் இவரது இறப்பில் மர்மம் இருப்பதாகக் கூறிய உறவினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
















