காவல்துறையினர் இடுவாய் கிராமத்தை கருப்பு தினமாக மாற்றி உள்ளதாக பாஜக திருப்பூர் வடக்கு மாவட்ட தலைவர் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.
இடுவாய் ஊராட்சிக்குட்பட்ட சின்ன காளிபாளையம் பகுதியில், குப்பைகளை கொட்ட வந்த மாநகராட்சி வாகனங்களை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை குண்டுகட்டாக கைது செய்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதில், பொதுமக்கள், காவலர்கள் என 7 பேர் காயமடைந்து திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், காயமடைந்தவர்களை பாஜக மாவட்ட தலைவர் சீனிவாசன் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து பொதுமக்களை போலீசார் தாக்கியதற்கு கண்டனம் தெரிவித்த அவர், கருப்பு தினமாக காவல்துறையினர் இடுவாய் கிராமத்தை மாற்றி உள்ளதாக தெரிவித்தார்.
















